Friday, December 10, 2010

பாலியல் தொழிலாளி

அடுத்தவன் பசிக்காக
உடம்பையே கொடுக்கிறாள்
இவளும்
ஒரு
''சிபி'' தான்

முத்தம்

நீ இதழில்
முத்தமிட்டாய்
ஒட்டிக்கொண்டது
உதட்டுச்சாயம்
அடம் பிடிக்கும்
குழந்தைக்கு
அம்மா ஊட்டிய
சாதம் போல...

Saturday, December 4, 2010

மும்மூர்த்தி

சிவனும்
பிரம்மாவும்
நீ
உன் பார்வையால்
சில முறை
என்னை 
படைக்கிறாய்
பல முறை
அழிக்கிறாய்

ஆனால்
திருமால்
நான்
ஏனெனில்
உன்னை காப்பதால் அல்ல
உனக்காக காப்பதால்......