Friday, November 26, 2010

தேடல்

திருவிழா கூட்டத்தில்
தேடுகிறது
குழந்தை,
மிட்டாய் கடையை
தான்
தொலைந்துபோனது
தெரியாமல்...

தாய் நதி

நான் கவிதைகளை
அருவியாக
கொட்டுகிறேன்.
ஆனால்
தாய் நதி
நீ......

வண்ண உடை தேவதை

தேவதைக்கு
வெள்ளை உடையாம்.
யார் சொன்னது?
உன்னை
வண்ண உடையிலும்
பார்க்கிறேன்.

முதல் குழந்தை

எத்தனை குழந்தை
வேண்டும் என்றாய்..
நான் சொன்னேன்
''மூன்று''
நீ சொன்னாய்
''இரண்டு''
ஆமாம்
நீதானே என்
முதல் குழந்தை........

துப்பட்டா

பிடிக்கிறதோ?
இல்லையோ?
கொடு உன்
துப்பட்டாவை....


சரி என்றால்
தொட்டில் கட்ட
இல்லை என்றால்
தூக்கில் தொங்க.......

Thursday, November 25, 2010

அமிலம்

வயிற்றில் சுரந்த
அமிலம்
நீ
இல்லையென்றதும்
இதயத்தில்
கசிந்ததடி
மெல்ல...

Friday, November 19, 2010

நிலாச்சோறு

அமாவசையிலும்
நிலாச்சோறு
சாப்பிடுகிறது.
'தெருவோர குழந்தை'

நெற்றிநுனி முடி

உன்
நெற்றிநுனி முடி
காற்றில்
அசைகிறது
மெல்ல.......
என்
உயிரை
தூக்கிலிட்டபடி

Thursday, November 18, 2010

நகம்


நான்
தினமும்
நகம் வெட்டுகிறேன்.
உன் கண்ணம்
கிள்ளத்தொடங்கியதும்..

வைரம்

உலகில்
மிகப்பெரிய வைரம்
உள்ளங்கை அளவாம்
யார் சொன்னது?
உன்னை
பார்க்காதவன்.

கா(ம)தல் தீ

இவள்
தீக்குச்சி
அவன்
தீப்பெட்டி
எத்தனை முறை
உரசினாலும்
இவள் மட்டுமே
கருகிப்போகிறாள்
காதல்(காம)தீயில்.

வானவில்

வெயிலும்
மழையும் சேராமல்
ஒரு
வானவில்
நீ
வீதியில்
வருகிறாய் !!!

பிறை

இன்று மட்டும்
என் முற்றத்தில்
பத்து பிறைகள்
நீ
நகம் வெட்டினாய்!!

Tuesday, November 16, 2010

கோலம்

நீ
கோலம் போடுகிறாய்.
விரலால்
நிலத்தில்....
முடியால்
கழுத்தில்.....

மெழுகுவர்த்தி

ஒருமுறை
உரசியதால்
உயிருள்ளவரை
அழுகிறாள்.......

எண்ணி சொல்

உன்னை காதலிக்கும்
காரணங்களை எண்ணி
நட்சத்திரங்களாக அடுக்கி
வைத்துள்ளேன்.....
நீ
நட்சத்திரங்களை எண்ணி சொல்
நான்
காரணங்களை சொல்கிறேன்....

அர்ச்சனை

வாரமொருமுறை
கோயிலில்
உனக்கும்
தினமும் வீட்டில்
எனக்கும்
அர்ச்சனை நடக்கிறது...
வேளை கிடைக்காததால்

அமாவாசை

 

மாதத்தில் ஒரு நாள்
அமாவாசையாம்
எனக்குமட்டும் வருவதேயில்லை
நீ
அருகில் இருப்பதால்!!!!!!